மஹாலக்ஷ்மியை வரவேற்ற பத்மாவதி சுந்தரமூர்த்தி
மாமியார் திரிபுர சுந்தரி சீத்தாராம அய்யர் கற்றுக் கொடுத்ததை கடைபிடித்தார்
வரவேண்டும் வரவேண்டும் அஷ்ட லட்சுமி அருளை தரவேண்டும் தரவேண்டும் ஆதிலட்சுமி. வரம் தரும் லக்ஷ்மி என்பதால் வரலக்ஷ்மி. அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக
"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா....' "சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று அற்புத மான ஸ்ரீராகத்தில் , பத்மாவதி பாடலைப் பாடி பூஜையை தொடங்கினார்கள்
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது
இன்று 12.08.2016 சுமங்கலிகள் அனுஷ்டிக்கப்படும் விரதம் செய்வதால் சுமங்கலித்வம் வளரும் குடும்ப நலன் பெருகும் கன்னிபெண்கள் மேற்கொள்வதன் மூலம் சிறப்பான கணவர் அமையப் பெறுவார்
வீட்டின் பூஜை அறை முன்பு நன்றாக அலம்பி கோலமிட்டு வாழை மரம் கட்டி மாவிலை தோரணம் அலங்கரித்து நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கலச கும்பத்தை வைத்து அதற்குள் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு அரிசி தங்க காசு வெள்ளி காசு பழங்கள் கர்ஜூரக்காய் திராட்சை கற்கண்டு விரலி மஞ்சள் எலுமிச்சை கொய்யா கும்பத்தில் வைத்து மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து புதிய வஸ்த்திரம் சாற்றி வெள்ளியால் செய்யப்பட்ட மஹாலக்ஷ்மியின் பிரதிமை முகபிம்பத்தை வைத்து பூக்கள் காதோலை கருமணி சூட்டி ஆடை, ஆபரணங்கள் தரித்து ஆவாஹனம் செய்தார்கள்
அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்த்திரம் சொல்கிறது அதனால் ஒன்பது நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து அலங்கரித்து பூஜை முடித்து மஞ்சள் நோன்பு கயிறு சரடை கையில் கட்டிக் கொண்டார்கள்
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி அதன் மேல் கலசம் வைத்து பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து வாசலின் உள்நிலைப்படி அருகே நின்று கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து மகாலட்சுமி தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து பயபக்தியுடன் அழைத்து வந்து அலங்கரிக்கப்பட்ட மகாலட்சுமி பிரதி பிம்ப விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலக்ஷ்மியை வேண்டிக்கொண்டு ஆவாஹனம் செய்து மங்களகரமான ஸ்தோத்திரங்களை பாடினார்கள்
பூஜைக்கு தேவையானவற்றை அருகில் வைத்துக் கொண்டு பூஜையை தொடங்கி பஞ்சாங்கம் பார்த்து நாள் திதி வருஷம் பட்சம் மாதம் ஆகியவற்றை குறித்து கொண்டு விரத பூஜை எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடை பெற விக்னங்களை களையும் விநாயகரை பூஜித்து பின்னர் வரலக்ஷ்மி பூஜையை தொடங்கி சங்கல்பம் கலசபூஜை கண்டாபூஜை பிராணப்ப்ரதிஷ்டை ஷோடசோபசாரம் அங்க பூஜை மகாலட்சுமி அஷ்டோத்திரம் உத்தராங்க பூஜை ராஜோபசாரங்கள் தோரக்ரந்தி அர்க்யப் ரதர்நம் உபாயந தாநம் முதலியன பூஜை முடித்து ப்ரார்த்தனை செய்து வரலட்சுமிக்கு ஆரத்தி காண்பித்து சாதம், பாயசம், வடை, வைத்து நிவேதனம் செய்தார்கள் அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்தார்
எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக வேண்டினார்
பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம்
குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க வீட்டில் லட்சுமி கடாட்சம் மகாலக்ஷ்மியின் பார்வை பட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் ஸ்ரீவித்யா வெங்கட்ராமன் ப்ரக்ருத் அனைவரும் மற்றும் நைத்ருவ காஷ்யப கோத்திர தாயாதிகள் அனைவரும் எல்லா வளமும் பெறுவார்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக