Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

சனி, 10 செப்டம்பர், 2016

Mahalaya paksha benefits


knramesh Mahalaya paksha benefits மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் << "மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது. மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும். மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன. முதல்நாள் - பிரதமை - பணம் சேரும் 2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல் 3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல் 4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல் 5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல் 6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல் 7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் 8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் 9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். 10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல் 11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி 12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல் 13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் 14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. 15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல். எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டும

Mahalaya paksham 2016


knramesh Mahalaya paksham 2016 மஹாளய பித்ருபக்ஷம் 17.09.16செவ்வாய் முதல் 30.09.16செவ்வாய்வரை… நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம். மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம். 1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது , 2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது, 3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹாபரணி ,மஹாவ்யதீபாதம், மத்யாஷ்டமி,கஜச்சாயா ,ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்., மஹாளய பக்ஷம் திதிகள் தேதிகள் 17/09/16 சனி ப்ரதமை 18/09/16 ஞாயிறு த்விதியை 19/09/16 திங்கள் திருதியை 20/09/16 செவ்வாய் சதுர்த்தி, மஹாபரணி 21/09/16 புதன் பஞ்சமி,ஷஷ்டி(2திதிகள்) 22/09/16 வியாழன் சப்தமி 23/09/16 வெள்ளி மத்யாஷ்டமி,வியதிபாதம் 24/09/16 சனி நவமி 25/09/16 ஞாயிறு தசமி 26/09/16 திங்கள் ஏகாதசி 27/09/16 செவ்வாய் த்வாதசி, சன்யஸ்தமஹாளயம் 28/09/16 புதன் த்ரயோதசி 29/09/16 வியாழன் சதுர்த்தசி 30/09/16 வெள்ளி சர்வஅம்மாவாஸ்யை 01/10/16 சனி ப்ரதமை