
Translate
Translate
எனது வலைப்பதிவு பட்டியல்
-
Copyright Policy8 ஆண்டுகள் முன்பு
மொத்தப் பக்கக்காட்சிகள்
பிரபலமான இடுகைகள்
-
எனது பேரனும் வெங்கட்ராமன் ஸ்ரீவித்யா தம்பதியரின் மகனுமாகிய ப்ரக்ருத் பிறந்த நாள் 20.07.2016 ல் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது மூன்று ஆண்ட...
-
பிரயாகை ( அலகாபாத் ) ஷேத்திர மகிமை பிரயாகையை ஸ்தாபித்து ஆரியர்கள் என அழைக்கப்படும் பிராமணர்கள் வாழ்ந்த பகுதி பிரயாகை . " prayagasya pr...
-
சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய...
-
கயா ஷேத்திரம் தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் தான் கயாவில் சிரார்த்தம் செய்ய வேண்டும் மற்றவர்கள் கடவுளை தரிசனம் செய்யலாம் . கயா பீகார் ...
-
வாழ்வில் வெற்றி பெறவே பிறந்துள்ளோம் எஸ். ஆர். கிருஷ்ணமுர்த்தி ஒரு சகாப்தம் தன்னம்பிக்கை , விடா முயற்சி , வெற்றிக்கான ஏணி . வாழ்க்கையில்...
-
காசி பட்டு காசி பட்டு - பனாரஸ் பட்டு வட நாட்டினர் பனாரஸ் பட்டு புடவை கட்டி திருமணம் செய்வது சிறப்பான ஒன்று . காசிப்பட்டு காசியில் நெய்...
-
காஞ்சி சங்கர மடம் காஞ்சி சங்கர மடம் அனுமான் காட் பகுதி யில் காஞ்சி சங்கர மடம் உள்ளது . தமிழ்ர்கள் நிறைந்த பகுதி . தமிழ் அய்யர் அதிக...
-
காசி விஸ்வேஸ்வ ர ர் காசி கோவில் உள்ளே சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார் . சதுரமான சிறிய அறையின் நடுவில் சிவன் தரைத்தளத்தில் உள்ளார் . ...
-
நிலையான வட்டி கணக்கீடு கடன் பெற்ற தேதி Loan Date 06.06.2009 கடன் திருப்பிசெலுத்த வேண்டிய தேதி Loan tobe repay before 06.06.2010 திருப்பிசெலு...
ஞாயிறு, 31 மே, 2009
ஸ்கூபி எனது எஜமானர்

தன்னம்பிக்கை
வாழ்வில் வெற்றி பெறவே பிறந்துள்ளோம்
எஸ். ஆர். கிருஷ்ணமுர்த்தி ஒரு சகாப்தம்
தன்னம்பிக்கை ,விடா முயற்சி , வெற்றிக்கான ஏணி . வாழ்க்கையில் எதையுமே சவாலாக எடுக்கவும் மனது ஒடிந்து உட்கார்ந்து விட்டால் எதையுமே சாதிக்க இயலது
. -எஸ். ஆர். கிருஷ்ணமுர்த்தி அறிவுரை
இறைவனின் கருணையால் இப்பிறவியை உணரும் எஸ்.ஆர்.கே என்று உலகத்தார் அனைவராலும் அழைக்கப்படும் மாமனிதர்-பிறவியிலேயே இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இல்லாதவர்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை நினைவுட்டும் தோற்றம். வயது 63 -இரண்டரை அடி அளவே உயரம்.
பெற்றோர்க்கு எட்டாவது குழைந்தையாக் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து கோவையில் வசிப்பவர். கூட்ப்பிறந்த மற்ற அனைவரும் நல்ல உடல் அமைப்புடன் எந்த வித குறைபாடுமின்றி திகழ் எஸ்.ஆர்.கே வின் உடல் குறை பாடு பற்றி அப்பா அம்மா இருவரும் வருத்தப்படாமல் மனம் நோகாமல் வளர்த்தனர். மற்ற பயிற்சிகளையும் அளித்து உக்கப்படுத்தினர் தற்போது எழுதுவது போல் கண்ணுக்கும் தோள்பட்டைக்கும் நடுவில் பேனாவை வைத்து எழுதுவது அம்மாவின் பயிற்சி முறை.
பிறர் உதவியின்றி தானே பல் தேய்த்து தட்டத்தில் வைத்த சாதத்தை அவரே பிசைந்து சாப்பிடுகின்றார். இது மட்டுமின்றி கம்ப்யூட்டர் இயக்கவும் தெரியும். ஆங்கிலத்தில் சரளமாக பேச எழுதுவது மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவர் ஹிந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் நல்ல புலமை. ஹோமியபத்தி மருத்துவத்திலும் நல்ல அனுபவம்.
குடும்பம் இசைக்குடும்பமாதளால் முறையாக சங்கிதம் கற்று மேடை கச்சேரிகள் 2100 மேல் நிகழத்தி சாதனை புரிந்து கொண்டிருப்பவர் கலைமணி, கலைமாமணி உட்பட தமிழக அரசின் பட்டங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொவ்ரவித்திருந்தாலும் ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் உயர் திரு அப்துல் கலாம் முன்பு பாடியதுமின்றி அப்துல் கலாமையும் உடன் பாட வைத்த பெருமைக்கு முன்பு மற்றவை எம்மாத்திரம்? அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெரும் சமயம் நிகழ்த்திய உரையில் இன்றைய இளைஞர்களுக்கு தனன்பிக்கைக்கு உதரணமாக எஸ்.ஆர்.கே திகழ்கிறார் என்று சொன்னது மற்ற அணைத்து விருதுகளுக்கும் மேம்பட்டவை.
திரு.எஸ்.ஆர்.கிருஷ்ணமுர்த்தி அவர் குடும்பத்தார் அனைவரும் நீள் ஆயுள் நிறை செல்வம் நோயற்ற வாழ்வு பெற்று பல்லாண்டு இத் தரணியில் வாழ்ந்து தானும் பயன் பெற்று மற்றவர்களையும் திருப்திபடுத்த வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம் .
லைப் இன்சூரன்ஸ் எஜன்ட் அசோசியேஷன் சேலம் தெற்கு கிளை நடத்திய பயிற்சி பட்டறையில் 03.03.2009 அன்று திரு எஸ்.ஆர்.கே பங்கு பெற்ற நிகழ்ச்சியில் தான் இவ்வளவு நேரமும் நீங்களும் பங்கு பெற்றீர்கள். நிகழ்ச்சியில் அவர் செய்த சாதனையின் ஒரு பகுதியினை போட்டோ வடிவத்தில் தற்போது பார்க்கிறீர்கள் www.you tube.com வலைத்தளத்தில் S R KRISHNAMURTHY என்றோ அல்லது No Hands & No Legs என்று search பகுதியில் தேடினால் 3.34 நிமிடங்கள் பதிவான நிகழ்ச்சியை ரசிக்கலாம்.
கீழே உள்ள youtube பகுதியிலும் ரசிக்கலாம்.- சேலம் LIC சுந்தரமுர்த்தி