
தகப்பனார் இல்லாதவர்கள் மட்டும் தான் கயாவில் சிரார்த்தம் செய்ய வேண்டும் மற்றவர்கள் கடவுளை தரிசனம் செய்யலாம்.
கயா பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத் தலைநகர். பாட்னாவில்ருந்து 91 KM தொலைவில் அமைந்துள்ளது. காசியிலிருந்து கயா 230 km தொலைவில் உள்ளது. கயா ரயில் நிலையத்திலிருந்து 5 km தூரத்தில் பல்குனி நதிக் கரையில் அமைந்துள்ள விஷ்ணு கோயில் அழகான சிறிய நகர். இந்தி மொழி பிரதானமாக பேசினாலும் மற்ற மொழிகளை அறிந்து கொண்டு பதிலளிகின்றனர். சிலர் தமிழிலும் ஓரளவிற்கு பேசுகின்றனர். பாஷை முக்கியமில்லை.
வைஷ்ணவத் ஸ்தலங்களில் விஷ்னுபாத கோவில் மிகவும் புனிதமானது முன்னோர்களுக்கு பிண்டதானம் அளிக்க முக்கியமான ஸ்தலம். பல்குனி நதிக்கரையில் விஷ்ணு பகவான் ஆலயம் அமைந்துள்ளது.
கயா ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் சாந்நித்தியம் உள்ளது.இங்கு தங்கி நீத்தார் கடன் இயற்ற பல வசதியான தங்குமிடங்கள் விஷ்ணு பாத கோவில் அருகிலேயே உள்ளன. கயாவில் நீத்தார் கடன் செய்தால் முன்னோர்கள் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். கயாவில் வருடம் முழுவதும் 365 நாட்களும் பித்ரு சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது.
கயாபுரி என்கிற கயாவில் ராமர் சீதை லக்ஷ்மனருடன் வந்து தனது தகப்பனார் தசரதருக்கு பிண்ட தானமளித்த வரலாறு அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக