Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

கயாவில் தரிசிக்கவேண்டியவை

பல்குனி நதியில் நீரிருந்தால் நீராடுதல்

விஷ்ணு பாத கோயிலில் பிண்டமிடுதல்

சுவாமி தரிசனம் செய்தல்

அட்சய வடம் சென்று பிண்டமளிதல்

தானம் செய்தல்

பிராமன போஜனம் செய்வித்தல்

அட்சய வட்டத்தில் பிராமணரிடம் திருப்தி கூறி ஆசி பெறுதல்

காய் ம் இலை மூன்றையும் விடுதல்

அருகிலுள்ள புத்த கயா சென்று புத்த விசாரங்களை தரிசித்தல்

புண்ணியமான சிராத்த விதியை யார் எழுதுகிறார்களோ, யார் படிக்கிறார்களோ, அவர்கள் சர்வ அதிஷ்டங்களையும் அடைகிறார்கள். நிச்சயமாய் புனர் ஜன்மம் இல்லாதவர்கள். சிராத்திற்கு திருப்தி அடைந்த பித்ருக்கள் கர்த்தாவுக்கு ஆயுள், புத்தி, தனம், வித்தை, ஸ்வர்கம், மோஷம், ராஜ்யம், புத்ரபலம் முதலானவைகளை கொடுக்கிறார்கள்.

கயா தானம் அளிப்பதின் பலன்

அன்ன தானம்-தரித்திரமும் கடனும் நீங்கும்.

வஸ்திர தானம்-ஆயுள் விருத்தி ஆகும்.

கோ தானம்-ரிஷிக்கடன் தேவகடன் பிதுர் கடன் அகலும்.

தீப தானம்-கண் பார்வையை தீர்க்கமாக்கும்

அரிசி தானம்-பாபங்களை போக்குகிறது

நெய்த் தானம்- நோய் தீர்க்கும்

தேங்காய் தானம்-நினைத்த காரியம் வெற்றியாகும்

பழங்கள் தானம்-புத்தியும் சித்தியும் கிட்டும்

கயா-சுற்றுலா ரயில் சேவை

சுற்றுலா ரயில் சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்குகிறது. "பாரத தரிசனம்' என்ற இச் சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து புறப்படுகிறது.

காசி, கயா, அலாகாபாத் உள்ளிட்ட பல்வேறு புண்ணியத் தலங்களுக்கு இந்த ரயில் சேவை இயக்கப்படும். 9 நாள்கள் கொணட இந்த யாத்திரைக்கு கட்டணம் நபருக்கு ரூ.4,620 மட்டுமே. இதில் பக்தர்களுக்கு 3 வேளை தென்னிந்திய சைவ உணவு, காலையில் காபி, உள்ளூர் சுற்றிப் பார்த்தல், தங்கும் இடம், மேலாளர், பாதுகாவலர் உள்ளிட்ட வசதிகள் அடங்கும்.

இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி அங்கீகாரம் பெற்ற டிராவல் டைம்ஸ் (இந்தியா) நிறுவனத்தை தொடர்பு கொளளலாம். இதற்கான தொ.பே. எண்கள்:சென்னை-28461131,28461113,9790926956. மதுரை- 0452-4391228, 9003933269.
கோயம்புத்தூர்-0422-2496667, 9345796778.

http://www.gaya.bih.nic.in

கயா மாவட்டத்தில் உள்ள கோவில்களின் தரிசன நேரம், புகைப்பட காட்சிகளும் சாஸ்த்ரிகளின் பெயர், போன் நம்பர், விழாக் காலங்களில் அமுல் படுத்தும் நடைமுறை என அனைத்தையும் அறிய மேற்க்கண்ட வலைத்தளத்தில் காணலாம். பிண்டதானம் செய்யும் நேரமும் கட்டணமும் அறியலாம்.


கயா ஷேத்திர மகிமை

முதலில் பிரயாகை-அடுத்து காசி-மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிரார்த்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

கயாவில்சிரார்த்தம்: செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கேட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர் செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது .அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர்.

விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் தமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார் .விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன்

புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டி வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித ஸ்தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.


புத்த கயாவில் 300 அடி உயரமுள்ள விஷால் புத்தர் மந்திர் அருகில் எங்கள் குழுவினர் கோபாலன் ஜெயலக்ஷ்மி தம்பதியினருடன்

கயா-புத்த கயா

முக்கியமான சில பௌத்த மடாலயங்களை தரிசித்து மன நிம்மதி அடைந்தோம். தியானம் செய்யத் தோன்றும் வசீகரமான இடம். பல பௌத்த பிட்சுக்கள் நடமாடிய இடங்களில் நாமும் நடக்கிறோம் என்பதே மகிழ்ச்சி. பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் பெளத்த பிரகாரங்கள் அவர்கள் நாட்டின் சம்பிரதாயப்படி கலை யழகு மிளிர கட்டியுள்ளதை பார்த்து ரசிக்க நேரம் தான் போதவில்லை.



பிண்டதானம்-கயா-அஷய வடம் (ஆலமரம்)

பின்னர் ஒரு ஆட்டோ மூலம் அஷய வடம் சென்றோம். சிறிது உயரமான குன்றின் மீது அமைந்துள்ளதால் படிகள் மீது ஏறி அஷய வடம் சென்றோம். சாஸ்திரிகள் எங்களுடனே வந்தார்.

அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக உள்ளது

அஷய வடம் மரத்திற்கு அடியில் விக்கிரகங்கள் இருக்கின்றன. மரத்தை வலம் வந்து அதனடியில் அமர்ந்து காரியங்களை செய்யவேண்டும்.

மூன்றாவது கலசத்திலிருந்து தயாரித்த 64 பிண்டங்களிலிருந்து ஒரு பிண்டத்தை மட்டும் காகத்திற்கு வைத்தோம். அதுவரை தென்படாத ஒரு காகம் நாங்கள் பிண்டம் வைத்தவுடன் ஓடோடி வந்து பிண்டத்தை ரசித்து சாப்பிட்டது. அமாவாசை தர்ப்பணத்தின் போது கா கா என்று கத்தி வரும் காகம் அன்று கத்தாமலே வந்தது மட்டுமின்றி, ரசித்து சாப்பிட்டது. எங்கள் மூதாதையர் அவர் வடிவில் வந்து உணவருந்தி எங்களை ஆசீர்வதிததாக சந்தோஷமடைந்தோம். அஷய வடத்தில் படைக்கப்படும் பிண்டத்தை காகம் கிழக்கே எடுத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக சிரார்த்தத்தில் பெற்றோர்க்கும் மூதாதையருக்கும் தான் செய்வது வழக்கம். சாஸ்திரிகள் சங்கல்ப தர்ப்பண சிரார்த்த மந்திரங்கள் சொன்னபடி நாங்களும் எங்கள் எனது வழி எனது மனைவி வழி மூதாதையர்கள் அனைவருக்கும் தாய் வழி தகப்பனார் வழி உடன் பிறந்தோர் சகோதர சகோதரிகள் அத்தை மாமா சித்தி சித்தப்பா என அணைத்து உறவு முறையினருக்கும் தனி தனியாக பெயர் கூறியும் பெயர் தெரியாவிடின் உறவு சொல்லியும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் உறவினர்கள் விபத்தினாலோ குறைப்பிரசவத்தலோ மரித்திருப்பின் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் வளர்ப்பு பிராணிகள் - நாங்கள் எங்களது உயிருக்கு உயிராக வளர்த்த Scooby யும் எங்கள் மேல் அளவு கடந்த பாசம் வைத்து உற்ற நண்பனாக இருந்து உயிர் நீத்த Scooby க்காக மீதியிருந்த 63 பிண்டங்களிலிருந்து பிண்டம் அளித்தோம்.

மூதாதையர்கள் அனைவரும் ஸ்வர்க்கத்தில் நீர், உணவு, ஆசை, பற்று இன்றி றுபிரப்பின்றி, முக்தி அடையவேண்டி பிரார்த்தனை செய்து அங்குள்ள பிராம்னர்களுக்கு தானம் அளித்தோம். அவர்களும் மிகுந்த திருப்தியுடன் திருப்தி திருப்தி திருப்தி என்று சொல்லி ஆசீர்வதித்தனர்.

இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு ம், ஒரு இலை ஆகியவற்றை மந்திரத்தை சொல்லி இங்கு துறந்தோம். பிறகு அவற்றை வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது.

அஷயவடதிலுள்ள பண்டாக்களுக்கும், பிராமனர்களுக்கும் தானம் செய்தபின்னர் அருகிலுள்ள வியாபாரி குழைந்தைகளும் வந்து சேர்த்தனர், அவர்களுக்கும் தானமளித்தோம்.

பின்னர் நேராக சாஸ்த்ரிகள் வீட்டிற்கு வந்தோம். உணவு சாஸ்திரிகள் வீட்டிலேயே தயாரித்திருந்தனர். பிராமன போஜனம் இரண்டு நபர்களுக்கு செய்வித்து தானம், தட்சணையும் அளித்தோம். மூதாதையருக்கு உணவளித்தது போன்ற திருப்தி ஏற்ப்பட்டது. பின்னர் சாஸ்த்ரிகளுக்கு சம்பாவனை செய்து ஆசி பெற்று நாங்களும் போஜனம் செய்தபின்னர் மடத்திற்கு வந்து சிரமபரிகாரம் செய்தபின்னர் 4.00 மணிக்கு புத்த கயா சென்றோம்.



பிண்டதானம்-கயா விஷ்ணு பாதம்

பின்னர் உடலை சுத்தம் செய்து கொண்ட பின்னர் மறுபடியும் பிண்டதானம் தர்ப்பணம் செய்தோம். இதில் எனது மனைவி இரண்டாவது கலச அவிசிலிருந்து 42 பிண்டங்கள் தயாரித்து கொடுக்க இந்த தடவை எனது மற்றும் எனது மனைவி வழி உறவினர்கள் அனைவரின் பெயர் கூறி பிண்டம் அளித்தோம். ஜபம், தர்ப்பணம் சங்கல்பம், சிரார்த்தம் அனைத்தும் முடிந்த பின்னர் பிரமணர்களுக்கு தானமாக 9 கச வேஷ்டி அங்கவஸ்திரம், தர்ப்பணம் செய்ய பித்தளை செம்பு, பஞச பாத்திரம், உத்திரினி, வேத புஷ்தகங்கள், பூணூல், ரவிக்கை துண்டு, குடை, விசிறி, தாம்பாளம், தட்சனை என அவருக்கு தம்பதியராக நமஸ்கரித்து தானம் அளித்தோம். அவரும் அவற்றை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதித்தார்.

பின்னர் சுத்தி செய்து கொண்டு விஷ்ணு பாதம் சென்று விஷ்ணுவை ஆராதித்து நமஸ்கரித்த பின்னர் 42 பிண்டங்களையும் விஷ்ணு பாதத்தில் சமர்ப்பித்து ஆசி வேண்டினோம். விஷ்ணு பாதம் வெள்ளியினால் செய்த தொட்டியில் என் கோண வடிவில் அமைந்துள்ளது. சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள பிரகாரத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஆண்கள் மட்டும் ஹோமம் வளர்த்து மறைந்த முன்னோர்கள் அனைவரின் பெயரையும் கூறி சிரார்த்தம் செய்தோம். எனது மனைவி அஷய வட்டத்தில் பிண்டம் போடுவதற்க்காக அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து மூன்றாவது கலசத்திலிருந்து 64 பிண்டங்கள் தயாரித்தாள். ஹோமம முடிந்து கடவுளை நமஸ்கரித்த பின்னர் அங்குள்ள பண்டாகளுக்கு தானம் செய்தோம்.

ஆலயத்தில் கதாதரர் வடிவில் மகாவிஷ்ணுவை தரிசிக்கலாம். விஷ்ணு பாதம் தரிசித்து சபா மண்டபம் அருகில் சிவனும் லஷ்மியும் கோவில் கொண்டுள்ளார்கள். கதாதரர் நரசிம்மர் கயாஸ்வரி ஆகிய கடவுள்களும் உள்ளனர்.

தந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி
பிண்டதானம்-கயா பல்குனி நதி

அவசர காலத்தை முன்னிட்டு ஒரே நாளில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது அதனால் பஞ்சசிராத்தம் பல்குனி, விஷ்ணு பாதம், அஷய வடம் முதலியவற்றில் செய்தோம். நாங்கள் ஆறு நபர்கள் பிராமண சிரார்த்தம் செய்ய இருந்ததால் அவருடைய சிஷ்யரை எங்களுடன் அனுப்பி சிரார்த்த காரியங்களை கவனிக்குமாறு கூறினார். நாங்கள் பல்குனி நதியில் நீராட சென்றோம் அங்கு சென்று பார்த்தபின்பு தான் தெரிந்தது பல்குனி நதியில் நீர் ஒட்டம் இல்லை என்பதும் சிறிய வாய்க்கால் மாதிரி தண்ணீர் இருந்தது அதில் குளிக்க முடியாது என்பதையும் அறிந்தோம். பல இடங்களில் ஊற்று நீரை தேக்கி வைத்திருந்தார்கள். நாங்கள் ஆற்றின் வாய்க்காலிலிருந்து தெளிந்த நீரை ஒரு பித்தளை செம்பு பாத்திரத்தில் பிடித்துக் கொண்டு நீராடியதாக பாவித்து ப்ரோச்சனம் செய்து கொண்டோம்.

பின்னர் பல்குனி நீருடன் ஆற்றின் படி எறி முன்னால் உள்ள மண்டபத்தில் அமர்ந்து சங்கல்பம், தர்ப்பணம் செய்தோம். பின்னர் அருகிலுள்ள மண்டபத்தில் சுந்தரமுர்த்தி ஆகிய நானும் எனது தர்மபத்தினி பத்மாவதியும் மூன்று மண் கலசங்கள் தனித்தனியாக வைத்து கீழே அக்நி தயார் செய்து மண் கலசத்தில் அவிஸ்/பிண்டம் தயாரிக்க அதில் பல்குனி ஆற்று நீரை ஊற்றி, அரிசியிட்டு சாதம் நன்கு வெந்தவுடன் ஒரு கலசத்தை மட்டும் எடுத்து வந்து விஷ்ணு பாதத்தின் முன்புறம் அமைந்துள்ள சிரார்த்தம் செய்வதற்க்காக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் அமர்ந்தோம்.

சாஸ்திரிகள் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக தர்ப்பணங்கள் செய்வித்த பின்னர் நாங்கள் தயாரித்து கொண்டு சென்ற அவிசிலிருந்து எனது தர்மபத்தினி பிண்டங்கள் தயாரித்து கொடுக்க நான் எங்கள் தந்தை சீத்தாராம அய்யர்-தாயார் திரிபுரசுந்தரி அவர்களுக்கும் அவர்களது முன்னோர் மூன்று தலைமுறைகளுக்கும் எனது மனைவி பரம்பறையில் மூன்று தலை முறைகளுக்கும் பித்ரு தர்ப்பணம் செய்து பிண்டம் போட்டு அவர்கள் நிம்மதியுடன் சொர்க்கத்தில் வாழ்ந்து எங்கள் தலைமுறையினரை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் செல்வசெழிப்புடனும் வாழ அவர்கள் ஆசியை கோரி பிரார்த்தனைகள் செய்து பிண்டம் அளித்தோம்.

பிண்ட தர்ப்பணம் செய்து முடித்தவுடன் அவற்றை பல்குனி நதியில் விடவேண்டும் ஆனால் நதியில் நீரில்லாததால் கோவிலில் இருந்த பசு மாட்டிற்கு இந்த பிண்டங்களை அளித்தோம். பசு மாடும் பிண்டம் போட்டவுடன் விரும்பி அனைத்தையும் சாப்பிட்டது எங்கள் பித்ருக்கள் பசு மூலமாக வந்து எங்களை ஆசீர்வதித்ததாக மகிழ்ச்சி அடைந்தோம்.

நாங்கள் முன்னதாகவே வழக்கமாக அமாவாசை தர்ப்பணம் செய்யும் போது மேற்கண்ட முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் செய்வதால் அனைத்தும் ஞாபகத்தில் இருந்து செய்தோம். பின்னால் மற்ற அனைவருக்கும் தர்ப்பணம் செய்யும்போது பெயர் மறந்து விடாமல் இருக்க எங்கள் உறவினரிடம் கேட்டு மறைந்த முன்னோர்கள் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தண்ணீர் படாமல் இருக்க லேமினாடிட் செய்து கொண்டு போயிருந்தோம். எங்கள் குழுவில் மற்றவர்கள் யாரும் இது போல் கடை பிடிக்காதனால் சிறிது சிரமப்பட்டார்கள்.

ஆத்மபிண்டம்

தனக்காக விஷ்ணு பாதத்தில் போட்டு ஒப்படைக்கலாம் ஆனால் இதன்பின்னர் இருப்பிடம் சேரலாகாது காசியிலே காலத்தை கழிக்கவேண்டும் தெரியாமல் சிலர் ஆத்மபிண்டம் போட்டபின்னர் ஊர் திரும்பினால் அவரது பாபம் வீட்டில் வாழும் மற்றவர்களை பாபம் பற்றிக்கொள்ளும் அதனால் தற்போது ஆத்மபிண்டம் செய்விக்கும் சாஸ்திரிகள் யாரும் கயையில் இல்லை.

கயா சிராத்தம்

கயா ரயில் நிலையத்திலிருந்து ஒரு பஸ் மூலமாக விஷ்ணு பாதத்திற்கு அருகிலிருந்த மடத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேர்ந்தோம். சிறிது சிரமபர்காரம் செய்து கொண்டு பின்னர் அங்கேயே குளித்து ஆண்கள் பஞ்சகச்சமும் பெண்கள் மடிசார் கட்டியும் பிண்ட பிரதான சிரார்த்தம் செய்ய ரெடியானோம். 8.00 மணிக்கு சாஸ்திரிகள் வந்து கயா மகாத்மியம் பற்றி அனைவருக்கும் விபரமாக கூறினார். பிராமணர்- பிராமணர் அல்லாதோர் இருவரும் செய்யவேண்டிய சிரார்த்த முறைகள் பற்றி விபரமாக கூறினார்.

சிரார்த்தங்களை செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்.

இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும்போது காசி-பிரயாகை-கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.

தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.

மனித யக்ஞம்: மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை. நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்கவேண்டும், இது மனித யக்ஞம்.

பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.

பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.

ஆக மனிதனாகப்பட்டவன் மனிதயக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்கவாசிகளான தேவர்கள், பிண்டதானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரகவாசிகள், பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர். அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி ஆரோகியம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.

வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமாரசெய்து பகவான் ஜனார்த்தனர் ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ருதீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அஷ்யவடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .

அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவு கூர்கிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாரவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.

கயையில் பிரமணர்களை கொண்டுதான் சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது.