Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

சனி, 11 ஜூன், 2011

தனித்தன்மை வாய்ந்த அடையாள எண்


AADHAAR அடையாள எண் வாங்கி விட்டீர்களா?இல்லையெனில் உடனே வாங்கவும் விபரம் கீழே:ஏனென்றால் நான் கோடியில் ஒருவன்.நீங்கள் ? 
இந்திய அரசு அளிக்கும் இந்திய தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு எண்AADHAAR அடையாள எண் வாங்கி விட்டீர்களா?இல்லையெனில் உடனே வாங்கவும் விபரம் கீழே:ஏனென்றால் நான் கோடியில் ஒருவன்.நீங்கள் ? 
இதுவரை  ஒரு கோடிக்கு மேலானவர்கள் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர் தாங்களும் இதில் ஒருவரா இல்லையென்றால் உடனடியாக பதிவு செய்யவும்.அடையாள எண் பெற்றவர்களில் இதுவரை  குறிப்பிடத்தக்கவர்கள் 13 நாள் குழந்தை முதல் 103  வயது கடந்த  இளைய முதியவர் வரை அடக்கம்.
ஆதார் எண்பது 12  இலக்கம் கொண்ட தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் .இது இந்தியாவில் வசிக்கும் அணைத்து தனி நபர்களுக்கும் கிடைக்கும்.இதன் மூலம் நபரின் அடையாளம் இருப்பிடம் இருப்பதால் இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் நமக்கும் பாதுகாப்பு.  
வங்கியில் கணக்கு ஆரம்பித்து சேமிக்க மத்திய மாநில அரசுகள் அளிக்கும் உதவித்தொகை ATM கார்டு மூலம் நடுவில் இடைத்தரகர் இல்லாமல் தொகை பெற, இன்ஸ்யூரன்ஸ் தொகை செலுத்த, பெற, பென்ஷன் தொகை பெற, மற்றும் அனைத்துவிதமான மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற உதவிகரமாக இருக்கும். மற்றவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்-அடையாள சான்றிதழ்-போட்டோ ஒட்டிய அடையாள சான்றிதழ் என்று அதிக ஆவணங்கள் இல்லாமல் இது ஒன்றே போதுமானது பல அடையாள அட்டை வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம் 
இந்திய அரசின் அதிகாரபூர்வமான இருப்பிட அடையாள எண் கொண்டது இது ஒன்று தான் தற்போது KYC Know your customer க்கு மாற்றாக KYR know your resident என்று அழைக்கப்படும் இந்த எண் மூலம் நமது மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் உபயோகப்படுத்தலாம்.    இந்த இருப்பிட சான்றிதழ் அனைத்து விதமான சேவைகளும் பெற உதவியாக இருக்கும் மாநில மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்கலாம்.
 தனித்தன்மை வாய்ந்த அடையாலமுள்ள 12 இலக்க எண் கொண்டது தங்களது இருப்பிட அடையாளங்கள் சொத்து விபரங்கள் ஆகிய சுய விபரங்களுடன் கூடிய இந்த சான்றிதழ் மூலம் தாங்கள் சேவை பெரும் நிறுவனங்களை திருப்தி படுத்தலாம் பிற அடையாள அட்டைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்த திட்டத்தை அரசுடன் சேர்ந்து செயல் படுத்துவோர் LIC ஆயுள் காப்பீட்டு நிறுவனம்-தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்-பொதுத்துறை நிறுவனங்கள்-  
தேவைப்படும் ஆவணங்கள் தரமுடியாமல் நிறைய நபர்கள் இருப்பதால் அவர்களும் பயன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உதாரணமாக நாடோடிகள் பிச்சைக்காரர்கள் குடிசை வாசிகள் போன்ற நிரந்தர குடியிருப்பு இல்ல்லாதவர்களும் பெறலாம்
அறிமுகத்தின் பேரில் இவர்களும் அடையாள எண் பெறலாம்
அறிமுகப்ப்படுத்துவோர் யார் :?அரசு அதிகாரிகள்-பள்ளி உபாத்தியாயார்கள் தலைமை ஆசிரியர்கள்-அங்கன்வாடி பணியாளர்கள்- ஏற்க்கனவே ஆதார் அட்டைபெற்றவர்கள் போன்ற அனைவரும் அறிமுகம் செய்து உதவலாம்,-
அடையாள எண் பெற எளிமையான நடைமுறை

அதிகாரபூர்வமான அடையாள அட்டை வழங்கும் இடத்தில் தரப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் KYC எனப்படும் நாம் ஏற்க்கனவே உபயோகப் படுத்தும் ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள  அட்டை பாஸ்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் ஏதேனும் ஒரு ஆவணத்தை இனைத்தால் போதுமானது 
பெயர் –தகப்பனார் பெயர் /தாயார் பெயர் –திருமணமானவரா-துணை பெயர்-விலாசம் போன் எண் சொத்து விபரங்கள் வீடு –நிலம் –சில சேவை நிறுவனங்கள் தேவை இல்லாமல் இது போல கேட்கிறார்கள் 
வருடாந்திர வருமானம் தன்னை சார்ந்திருப்பவர்கள் எண்ணிக்கை பிறந்த தேதி  ஒரு நாமினியை நியமிக்கலாம் மேற்க்கண்ட படிவத்தில் மூன்று கையொப்பம் இட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவுடன் உடனடியாக
1) நமது  முகம் தெரியுமாறு போட்டோ ஒன்று எடுக்கப்படும்
2)                             பத்து விரல் ரேகை பதிவு செய்யப்படும்
3) இரு கண்ணின் கருவிழி கேமிரா மூலம் படமெடுக்கப்படும்
கை விரல் ரேகையும்-கண்விழியும் ஒருவர் போல் யாருக்கும் அமையாது என்பதால் இந்த பாதுகாப்பான ஏற்ப்பாடு


            மேற்க்கண்டநடைமுறைபதினைந்து நிமிடத்தில் முடிந்தவுடனேயேகம்ப்யூட்டர் திரையில் நாம் தெரிவித்தது அனைத்தும் பதிவாகியுள்ளதா என்பதை நாம் உறுதிப்படுத்தியவுடன் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் ஒரு மாதத்திற்குள் அடையாள எண் அரசினரால் வழங்கப்படும்
தகவல் அளித்த போது உள்ள தகவல்கள் அனைத்தும் இரகசியம் காக்கப்பட்டு இந்திய அரசின் காப்பகத்தில் பத்திரமாக இருக்கும் அரசு  நிறுவனங்கள் எந்த நேரத்திலும் இந்தியாவில்  எங்கிருந்து  விசாரிக்கும் போதும்  தகவல் சரி அல்லது தவறு என்று மட்டும் தான் அவர்களுக்கு பதில் கிடைக்கும் ஆதலால் உண்மையான தகவல்களையே கூறவும்.
கீழ் கண்ட வலை தளத்திலும் சென்று நமது தனித்தன்மை எண் பற்றிய நிலைமையை அறிந்து கொள்ளலாம் www.uidai.gov.in சந்தேகங்களுக்கு 1800 180 1947 எண்ணில் அறியலாம்
அறியாதது: விலாச மாறுதல் இருப்பின் யாரை அணுகி மாற்றம் செய்து கொள்வது ?
licsundaramurthy@gmail.com
04.08.2011
கருத்துகள் இல்லை: