இலவசம் BE படிப்பு –தங்குமிடம்-உணவு அனைத்தும் இலவசம் 
இலவசம் ஆனால் உண்மை
இன்று 28.05.2011 ஜெயா தொலைக்காட்சியில் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி பார்த்துக்  கொண்டிருக்கும் போது நிறைவேறிய இலவச அறிவிப்பு
கல்லூரியில் இலவசமாக தேர்வாக 
1)      80% சதவிகித   cut of Mark  பெற்றிருக்கவேண்டும் 
2)      தாய் தந்தையர் இருவரின் வருமானமும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கவேண்டும் எத் தொழில் சார்ந்தவரும் விண்ணப்பிக்கலாம் 
3)      அனைத்து   ஜாதியை சார்ந்தவரும் விண்ணப்பிக்கலாம ஜாதி ஒரு தடை அல்ல 
4)      ஷீரடி சாய் இன்ஜினியரிங் கல்லூரி சென்னையிலும் ஹோசூரிலும் இயங்கி வருகிறது ஏழை மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதனால் திரு. விசு மக்கள் அரங்க நிகழ்ச்சிக்கு மேற்கண்ட கல்லூரியின் சென்னை கல்லூரியில் சேருவதற்கு ஐந்து இடமும் ஹோசூரில்  ஐந்து இடமும் ஒதுக்கி உள்ளனர் 
5)      கல்லூரியில் படிக்கும் படிப்பு செலவு தங்குவதற்கான செலவு உணவு க்கான செலவு அனைத்தும் கல்லூரி நிர்வாகமே ஏற்ப்பதால் கவலை இன்றி சேரலாம் 
6)      மேற்க்கண்ட சேர்க்கை மக்கள் அரங்க சிபாரிசிலும் கல்லூரி நிர்வாக அனுமதியின் பேரிலும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு   நடை முறை  கடை பிடிக்கப்படும் 
7)      மற்ற விபரங்களுக்கு ஜெயா தொலக்காட்சி மக்கள் அரங்க நிகழ்ச்சியை பார்க்கவும் ஞாயிறு காலையிலும் மறு ஒளிபரப்பு சனிக்கிகிழமை மாலையிலும் பார்க்கலாம் 
8)      இது ஒரு தகவலுக்காக வெளியிடப்படும் அறிவிப்பே தவிர ஜெயா தொலைக்காட்சி- மக்கள் அரங்கம்-  ஷீரடி சாய் இன்ஜினியரிங் கல்லூரி  முதலியவற்றுக்கும் எந்த தொடர்புமில்லை
9)      பத்து மாணவ மாணவிகளும் கல்லூரியில் தேர்வாகி  படிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
10)   விண்ணப்பம் தெளிவான கையெழுத்துடன் 
சுய தகவல் படிவம் 
மதிப்பெண் பட்டியல் – சான்றளித்தவர் கையோப்பமுடன் 
தாயார் தகப்பானார் வருமான சான்றிதழ்
11)   அனுப்ப வேண்டிய முகவரி 
விசுவின் மக்கள் அரங்கம் 
தபால் பெட்டி எண்-6900
சென்னை -40     
கைபேசி 9677760909 
வாழ்த்துக்களுடன்இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த அரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு ஏழை மாணவனின் இன்ஜினியரிங் படிக்க வேன்ன்டும் என்ற அவாவின் வெளிப்பாடும் ஆசைப்பட்டதை அடைந்ததையும் பேசியது அருமையாக இருந்தது இந்த உந்து சக்தி இவரைப் போல் பலரையும் உருவாக்கும் எண்பது உறுதி எந்த கல்லூரிக்கு சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதே கல்லூரி தன்னை மதிப்பெண் பத்தாது என்று திருப்பி அனுப்பியும் படிக்க வேண்டும்  என்ற ஆசையினால் மாமாவின் சிபாரிசின் மீது சேர்ந்து கல்லூரி ஆரம்பிக்கப் பட்ட நாளிலிருந்து அது வறை யாரும் எடுக்காத மதிப்பெண்களை பெற்று தனித்துவம் பெற்று தன்னுடைய பெயர் கல்லூரி வளாகத்தில் அலங்கரிப்பதை கூறிய போது மிகவும் பெருமிதமாக அவர் உணர்ந்தாரோ என்னவோ நம்மையும் ஆழ்த்திவிட்டார் படப்பிடிப்புக் குழுவினரும் அனைத்து நிகழ்வுகளையும் காட்டி அசத்தி விட்டனர் தாயார் விவசாய கூலி தகப்பனார் ரொட்டிக் கடையில் கூலி வேலை பார்ப்பவர் குடும்ப சிலவிற்கே பற்றாது என்ற நிலைமை தம்பியும் படிக்க வேண்டிய  சூழ்நிலை  வறுமைக் கோட்டின் கீழ் இருந்தும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அப்துல் கலாம் கூறிய நவீன இளைஞன் நிச்சயமாக இவரும் இவரைப்போன்றவர்களும் தான்.  
   www.salemscooby.blogspot.com
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக