Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 2 நவம்பர், 2009



வலைதளத்தில் அலகாபாத்-பிரயாகை ஷேதிரத்தின் மகிமை பற்றியும் வழித்தடங்கள், ரயில்வே அட்டவணை, ஸ்தலபுராணங்கள், கும்பமேளா பற்றிய தகவல்கள் அலகாபாத் மாவட்டத்தை பற்றிய அணைத்து தகவல்களையும் அறியலாம்.

பிரயாகையில் தரிசிக்கவேண்டியவை

திரிவேணி சங்கமத்தில் நீராடுதல்

தானம் செய்தல்

பெண்கள் வேணி தானம் (கூந்தல்) செய்தல்

தம்பதி பூஜை செய்தல்

ஹனுமார் கோவில் தரிசித்தல்

ஸ்ரீ சங்கர விமான மண்டப தரிசனம்

ராமேஸ்வரத்திலிருந்து எடுத்து வந்த மணல் லிங்கத்தை திரிவேனியில் தம்பதியராக கரைத்தல்

கும்பமேளா காலத்தில் தரிசித்தல்


























பிரயாகை-மகா கும்பமேளா

சமுத்திர மந்தனுக்கு , கும்ப கலசத்திலிருந்து அமிர்த துளிகள் முதன்முதலாக ப்ரயாக் க்ஷேத்திரத்திற்கு கிடைத்தது பகவானின் விராட் ஸ்வரூபத்தை லக்ஷ்யமாகக் கொண்டு, உலக நலத்திற்காக கும்ப கலச பூஜை செய்யப்படுகிறது. பகவான் விஷ்ணு இதை தாங்கி காப்பாற்றுகிறார். அனைத்து தேவதைகளும், புண்ய தீர்த்தங்களும் கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள்.

பன்னிரண்டு நாட்கள் போர் நடைபெற்றதால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கூறிய ஷேத்திரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது ( தேவர்களின் ஒரு நாள் மனிதர்களுக்கு ஒரு வருஷம் ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிருஹஸ்பதி வ்ருஷப ராசியிலும், ஸூர்யன் மகர ராசியிலும் ஸஞ்சரிக்கும் சமயம் ப்ரயாகில் மகாகும்பமேளா அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தப் புனித சமயத்தில் லக்ஷக்கணக்கான ஆன்மீக, ஆஸ்தீக மக்கள் இங்கு புனித ஸ்நானம் செய்ய வருகிறார்கள். மகாகும்பமேளா பர்வத்தில் வடநாட்டின் பல மடங்களின் ஜகத்குருக்கள், சன்யாசிகள் இங்கு ஒரு மாத காலம் முகாம் அமைத்து கல்ப வாசம் அனுஷ்டிக்கிறார்கள். ஒவ்வொரு முகாமிலும் அது சமயம் அகண்ட பாராயணம் ஸ்ரீமத் பாகவதம் முதலிய புராணங்கள்; பஜனைகள், ப்ரவசனங்கள், ஹோமம் ஆகியவைகள் உலக சாந்திக்காக நடை பெறுகின்றன.

உத்தர பிரதேச சர்க்கார் மூலம் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படுகிறது.

அது சமயம் அங்கு வரும் தங்களின் சிஷ்யர்களுக்கும், அவர்கள் எல்லா வசதிகளும், தங்க இடம், போஜனம் ஆகியவை அளிக்கிறார்கள். முக்கிய ஸ்நான தினங்களில் ஸன்யாசி முதலியோர் சங்கமத்தில் புனித ஸ்நானம் செய்த பிறகு யாத்ரீகர்கள் புனித ஸ்நானம் செய்கிறார்கள்.

கும்பமேளா சமயம் பெருமளவில் யாத்ரீகர்கள் இங்கு விஜயம் செய்கிறார்கள். சிலர் ஒரு மாத காலம் கங்கையமுனையின் மத்திய பாகம் கல்பவாசம் செய்கிறார்கள். கல்பவாசம் பெரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.

பிரயாக் பாரதீய பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வளர்க்கும் சிறந்த புண்ணியதீர்த்தமாக விளங்குகிறது. இங்கு மக்கள் புனித நீராடி ஆத்மோன்னதி அடைகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள அறிஞர்கள் அறவோர்கள் கூடி நாட்டின் நடப்பை ஆராய்ந்து ஆண்மீகத்துறை மட்டுமின்றி மற்ற துறையையும் பேணிப்பாதுகாகிறார்கள் கும்பமேளாவிற்கு சந்நியாசிகளும் சாதுக்களும் பைராகிகளும் அவதூதர்களும் தபஸ்விகளும் ஞானிகளும் ஏராளமாக வருகிறார்கள். சிலர் குகை, மலைகளிலிருந்து கும்பமேளா தரிசனத்திற்க்காக மட்டும் வருபவர்கள். அவர்களை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் .



பிரயாகை-ஸ்ரீ சங்கர விமான மண்டபம்

பிரயாகைதிரிவேனியில் நீராடி கரையை நோக்கினால் ஸ்ரீ சங்கர விமான மண்டபம் கன கம்பீரமாக 130 ௦ அடி உயரத்தில் தோற்றமளிக்கிறது.

ஸ்ரீ ஆதிசங்கரரை நினைவு கூறும் வகையில் நான்கு அடுக்கு விமான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிய காஞ்சி பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகளுக்கும் நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். முதல்அடுக்கில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியும் நடு நாயகமாக கொலுவீற்றிருக்கும் 51 சக்தி பீடங்களையும் கொண்டுள்ளது. ஆதி சங்கரர் நிற்கின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இரண்டாவது அடுக்கில் திருப்பதி வேங்கடாசலபதி நூற்றெட்டு த்வ்யதேசங்களை நினைவில் கொள்கிராற்போல் சாளிக்கிரம வடிவில் காட்சி தருகிறார்கள்.திருமால் எடுத்த பத்து அவதாரங்களும் மட்டுமின்றி மற்ற பல அவதாரங்களையும் கருத்தை கவர்கிறது. மூன்றாவது அடுக்கில் சகஸ்ரலிங்கம். அதன் கருவறை ருத்திராட்சங்கங்களினால் வேயப்பட்டு சுற்றிலும் நூற்றியெட்டு சிவஸ்தலங்களை கண்முன்னே நிறுத்துகிறது. அழாகான சிவலிங்கங்களையும் கண்டு மகிழ்லாம்.

வேணீ மாதவர் கோயில்

காஞ்சீபுரம் ஆசார்ய ஸ்வாமிகளின் நிர்வாகத்தில், தென்னிந்திய ஆகம முறைப்படி, நித்திய ஆராதனம் செய்யப்பட்டுவரும், வேணீ மாதவர் கோயில் உள்ளது. அங்கு வேணீ மாதவரைச் சேவிக்கலாம்.. த்ரிவேணீ சங்கமத்தில் தீர்த்த ரூபத்தில் வேணீ மாதவர் வணங்கப்படுகிறார்.

ஜைன தீர்த்தங்கள்

பிரயாகில் பல ஜைன தீர்த்தங்களும், கோயில்களும் உள்ளன. அக்ஷய வடத்தின் கீழே ரிஷபதேவ் தவம் செய்ததால், இதை அவர்கள் மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். ஆண்டு முழுவதும் யாத்ரீகர்கள் இங்கு சங்கம ஸ்நானம் புரிய வருகிறார்கள்.


ஹனுமார் கோயில்

திரிவேணிக்கு அருகிலேயே ஹனுமார் கோயில் உள்ளது. தரையில் ஹனுமார் சயன திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார். சுற்றிலும் கம்பியிட்ட இடத்திலிருந்து குனிந்து வணங்கி வழிபட்டோம்.

பிரயாகை -அஷய வடம் (ஆலமரம்)

அக்ஷயவடம்'' இலையில் விஷ்ணு பகவான் சயனித்து உள்ளார். இதனால் இது அக்ஷயமாகக் கருதப்படுகிறது.'' இங்கு மாதவ பகவான் எழுந்தருளியிருந்து நித்ய வாசம் செய்கிறார். அவரைத் தரிசனம் செய்வதால் மனிதன் மகாபாபங்களினின்றும் விடுதலை பெறுகிறான்.'' பிரயாக் தீர்த்தத்தில் அக்ஷயவடம்'' முக்கியமான மிகவும் மகத்துவம் மிக்க புனிதமான இடமாகும். திரிவேணி சங்கமத்திலிருந்து எதிரில் கோட்டைக்குள் அக்ஷயவடம் உள்ளது. வாரத்தில் 2 தினங்கள் அனைவரும் கோட்டைக்குள் சென்று அக்ஷயவடத்தை தரிசனம் செய்யலாம். மற்றைய தினங்களில் கோட்டைக்குள் செல்ல கோட்டையின் அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டும். பாதாளபுரி கோயிலில் முன்பு அக்ஷயவடத்தையும் மக்கள் தரிசிக்கிறார்கள். பூமி மட்டத்திற்கும் கீழே இருப்பதால் இது பாதாளபுரி என்றும் சொல்லப்படுகிறது. பாதாளபுரியில் அதிகமாக தெய்வ சன்னதிகள் உள்ளன..

அஷயவடம் செல்லும் ஆலமரகிலையின் வேர் பிரயாகையிலும் நடுப்பகுதி காசியில்லும் நுனிப்பகுதி

கயையிலும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது கோட்டைக்குள் இருந்த ஆலமரத்தை முழுமையாக பார்க்க இயலவில்லை

.



த்ரிவேணி ஸ்நானம்

கங்கையின் தெளிவான ஜலம் யமுனையின் நீல நிறமுள்ள ஜலத்துடன் சங்கமமாகும் இடம் சங்கம ஸ்தலமாகும். இங்கு ஸரஸ்வதி நதி அந்தர்வாஹினியாக ஓடிக்கொண்டே இருக்கிறாள்.

படகுத்துறையில் ஏராளமான படகுகள் நிற்கின்றன அவற்றில் ஒரு படகை அமர்த்திக்கொண்டு சங்கமத்துறை பயணித்தோம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் கங்கை யமுனை சரஸ்வதி மூன்றும் சங்கமம் ஆகும் இடம் இருக்கிறது. படகுக்கார்கள் சங்கமத்துறை அருகில் நிறுத்தி விடுகிறார்கள் அங்கு ஆழம் அதிகமில்லை.

மூங்கில் கம்புகளில் படகை கட்டி நிறுத்துகின்றனர். மற்ற படகோடு உராய்ந்தபடி நிற்பதால் படகு அதிகம் ஆட்டம் காணாமல் நிலையாக நிற்கிறது. நான்கு மூங்கில்களை நட்டு அதன் நடுவில் பலகையினால் மேடை அமைத்துள்ளனர். கீழே குதிக்க பயப்படுபவர்கள் மற்றும் பெண்கள் அந்த மேடையில் அமர்ந்தவாறு பிளாஸ்டிக் வாளீயினால் தண்ணீரை மொண்டு ஸ்நானம் செய்கிறார்கள். ஸ்நானம் செய்யும் போது சில்லென்றும் கதகதப்பாகவும் இருக்கிறது காரணம் கங்கை நீர் உடலில் படும்போது சில்லென்றும் யமுனை நீர் படும்போது கதகதப்பாகவும் இருப்பது புரிகிறது.

யாத்திரையை தொடங்கும போது முதலில் இராமேஸ்வரம் சென்று சகல கர்மாக்களையும் செய்து அங்குள்ள மணலில் ஒரு பிடி எடுத்த மணல் லிங்கத்தை திரிவேனியில் வேணி மாதவரான லிங்கத்தை கரைத்தோம். மணலை கரைத்துவிட்டு திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தோம்

சங்கமத்தில் நீராடிய பின்னர் நாங்கள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேன்களில் சுத்த கங்கை நீரை கங்கை யமுனை சரஸ்வதி கூடுமிடத்தில் படகில் சென்று பிடித்து நிரப்பிக் கொண்டோம். நம் கையாலேயே நீரை நிரப்பி கொண்டு வந்து சொம்புகளில் விட்டு மூடி போட்டு அடைத்துக் கொண்டு வருவது மிகவும் விசேஷமானது. இராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமநாதர் சுவாமிக்கு அபிஷேகத்திற்க்காகவும் உறவினர்களுக்கு கொடுக்கவும் வீட்டில் பூஜை செய்யவும் கங்கை நீரை பிரயகையிலிருந்துதான் எடுத்து செல்ல வேண்டும்.

பூஜைகள் முடிந்து திரும்பும்போது படகில் அமர்ந்து பொரி கடலை வாங்கிப் படகில் அமர்ந்தபடி மீன்களுக்கு உணவிடலாம். மலர் குங்குமம் வளையல் ஆகியவற்றை கங்காதேவிக்கு அர்ப்பணிக்கலாம். அந்த இடத்தில் விளங்கும் தூய்மையும் பக்தி உணர்வும் பக்தர்களின் நெஞ்சில் நிலைபெறுகின்றன.

ஸ்தலப் புரோஹிதர்கள் (பண்டாக்கள்) தங்களின் அடையாளச் சின்ன கொடி அங்கு வைத்துள்ளார்கள். இதனால் யாத்ரீகர்கள் தங்களின் தீர்த்த புரோஹிதர்களை அடையாளம் கண்டுகொள்ள வசதியாய் உள்ளது.

குழந்தை இல்லாதவர்கள் பால் அபிஷேகம் செய்து சங்கல்பம் கூறுகிறார்கள். அங்கேயே பால் விற்கிறார்கள்.

முக்கியமாக வட இந்தியர்கள் திரிவேணீ சங்கம ஸ்தலத்தில் முடி இறக்கிக் கொள்கின்றனர்.

கணேசன் உஷா தம்பதிகள் வேநிதானம் செய்யும் காட்சி

வேணீதானம்: (கூந்தல் தானம்)

சுமங்கலி ஸ்திரீகள் வேணீ தானம் செய்கிறார்கள். சுமங்கலி ஸ்திரீகள் முதலில் தங்கள் கணவனுடன் திரிவேணீ கரையில் இதற்காகச் சங்கல்பம் செய்துகொண்ட உடன், மஞ்சள் பூசிக்கொண்டு ஸ்நானம் செய்தபின், கரையில் வந்து கணவனிடம் கூந்தல் தானம் செய்ய அனுமதி பெறுகிறாள். மனைவி கணவனை மாதவனாகக் கருதி வாழ்நாளில் தான் செய்யும் கடமைகளில் தான் செய்திருக்கக் கூடிய சிறு தவறுகளுக்கு மன்னிக்குமாறு வேண்டுகிறாள். இந்த இனிய கருத்துப் பரிமாரலில் தாம்பத்யம் புதிய பலத்தை பெறுகிறது. ஸ்நானம் செய்யும் சமயம், முடியைக் கட்டி முடித்து இருக்க வேண்டும்..வேறு எந்த ஷேத்திரதிலும் பெண்கள் தங்கள் கேசத்தை மழிப்பதோ கழிப்பதோ இல்லை த்ரிவேநிக்கு மட்டும் விதி விலக்கு.

கணவன் வேணீ தானத்திற்கான அனுமதி கொடுத்து, முடியின் நுனியில் மங்கள திரவியங்களைக் கட்டி, கணவன் மனைவிக்கு மூன்று கால் எடுத்துப் பின்னிவிட வேண்டும் பிறகு த்ரிவேநியையும் கத்திரிகோல்யும் பூஜிக்க வேண்டும் கத்திரிகோல் கூட ஒரு வகையில் த்ரிவேநிதான். கத்திரிகோல்ளின் இரு பகுதிகளாக கங்கையும் யமுனையும் இருக்கிறார்கள் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் ஆணி தான் சரஸ்வதி. முடியின் நுனியைக் கத்திரிக்கோலால் வெட்டி எடுத்து மனைவியின் கையில் கொடுக்கிறான். மனைவி இதை வழி பாட்டுக்குப்பின் பின்னலை முறத்தில் வைத்து வேநிதானம் செய்யவேண்டும். ஒரு சிறிய முறத்தில் சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம் ரவிக்கை துணி, தட்சினை இவற்றை வைத்து மேலே ஒரு சிறிய முறத்தால் மூடி தானம் செய்து விட்டு தம்பதியர் இருவரும் நீராடி வரவேண்டும். திரிவேணிக்கு அர்ப்பணிக்கப்படும் அந்தக் கூந்தல் நீரில் மிதப்பதில்லை விர்ரென்று நீருக்குள் மூழ்கி மறைந்து விடுகிறது.


பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகை (அலகாபாத்) ஷேத்திர மகிமை

பிரயாகையை ஸ்தாபித்து ஆரியர்கள் என அழைக்கப்படும் பிராமணர்கள் வாழ்ந்த பகுதி பிரயாகை. "prayagasya praveshshu papam Nashwati Tatkshanam." ப்ரயகச்ய பிரவேஷ்ஷு பாபம் நஷ்வடி த்க்ஸ்ஹநம் .".

சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த அந்தணர்ககளின் சந்ததியினர், தங்களது மூதாதையர்களின் கொள்கைகளை பரப்புவதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வாழ்கிறார்கள். ஒன்பதனாயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருவதை சரஸ்வதி நதி உறுதிப்படுத்துகிறது. வேத காலத்தில் கங்கை யமுனைக்கு மேற்க்கே ஓடிய நதி சரஸ்வதி நதி தற்போது வரண்டுள்ளது ஆயினும் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக ஓடிய நதி சரஸ்வதி நதி.

பிரயாகையிலிருந்து காசி 125 km தொலைவில் உள்ளது

முதலில் பிரயாகை அடுத்து காசி மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிராத்தம் முடிக்கவேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும்போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது.அகரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

பெரு வேள்வி கண்ட பூமியே பிரயாகை, தீர்த்த ஸ்தலத்தில், முக்கியமாக உபவாசம், ஜபம், தானம், பூஜை, பாராயணம் முதலியவை அனுஷ்டிக்கப்படுகின்றன.

கங்கை, யமுனை, ஸரஸ்வதீ ஆகிய மூன்று புனித நதிகளின் த்ரிவேணீ சங்கமத்தில் ஸ்நானம் செய்கிறவர்கள் பிரஹ்ம பதத்தை அடைகின்றனர்.