கால  பைரவர்
சிவனுடைய  பக்தர். நகரின் காவல்  தெய்வம். மத சம்பந்தமான  நியாயஸ்தர். 
சிவனின் நகரமான காசியை  கண்காணித்து வர பைரவர்களின் தூதுவர்கள் நகரின் ஒவ்வொரு பகுதியிலும்  நியமிக்கப்பட்டுள்ளார்கள். பண்டாக்கள் மயில்  பீலியினால் முதுகில் தட்டி பாபம் போக பிரார்த்திக்கிறார்கள். கறுப்புக் கயிறு  வாங்கி பண்டாவிடம் கொடுத்தால் அவர் அதை மிருத்தியஞ்சய மந்திரம் சொல்லி பைரவர்  திருவடியில் சாத்தி நமக்கு எடுத்துதருகிறார்கள். 
பைரவர் கோவிலில் கட்டப்படும் காசிக்கயிறு உடல்  நலத்திற்கும் வாழ்க்கை வளர்ச்சிக்கும் காப்பாக அமையும். காசிக்கயிறு என்ற  விசேஷமான காப்புக் கயிறு இங்கு மட்டும் தான் கிடைக்கும். 
உற்றார் உறவினர்  அனைவருக்கும் காசிப்ப்ரசாதமாக தர தவறாமல் வாங்கவேண்டும். பைரவரது வாகனம்  வேதத்தின் அம்சம் (நாய்)தான்.
காசிக்கு வருபவர்கள்  காசி யாத்திரை முடிந்து திரும்ப ஊர் செல்லும் முன் கடைசியாக விடை பெற்றுச்  செல்லவேண்டிய கோவில். 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக