Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 19 ஜூன், 2009

சேலம்


தமிழில் முதல் முறையாக EMI தவணை முறை கடன் அறிய சூத்திரம் - கணக்கீடு

கடன் பெரும் தொகையை, திரும்ப செலுத்தும் காலம்,அதற்கான வட்டியை கணக்கிடப்படும் சூத்திரம்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பெரும்பாலும் இந்தியாவை பொறுத்தவரை முதல் கனவு வீடு வாங்குவது தான் .சொந்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஏனெனில் வாடகை வீட்டில் குடி இருந்த அனுபவம் தான் ..ஆணி அடிக்காதே தண்ணீர் செலவு செய்யாதே உறவினர்கள் தங்கவைக்காதே இது போல் இன்னும் பலவற்றை கேட்டு நொந்து நூலாகி வீடு வாங்கியவரே பெரும்பாலும். தற்போது கிடைக்கும் வரி தள்ளுபடி சேமிப்பு போன்றவற்றிற்கும் பலர் கடன் வாங்குகின்றனர்.

கடன் பெரும் ஒவ்வொரு நபரும் தான் பெறும் கடன் தொகைக்கு செலுத்தும் வட்டி விகிதம் கடன் கட்டிய பிறகு செலுத்திய மொத்த வட்டி எவ்வளவு ? நடுவில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தினால் எவ்வளவு வட்டி மிச்சமாகும்? லாபமா வேறு வங்கிக்கு மாற்றிக்கொண்டால் எவ்வளவு மிச்சம்மாகும் என்ற வினா இருப்பினும் இதற்க்கான பதிலை பெற இயலவில்லை. கடன் தரும்போது வங்கிகள் அனைத்தும் வட்டி விகிதம் திருப்பி செலுத்தும் மாதம் மாத தவணை இவ்வளவும் சொல்லி நாம் சம்மதித்து கடன் பெற்றாலும் கடன் பெற்றாரின் மனநிலை எல்லோருக்கும் இதேமாதிரிதான்.

அசலும் வட்டியும் மாதா மாதம் ஒரே குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட தேதியில் கடன் பெறுவோர் செலுத்தவேண்டும் முதல் சில மாதங்கள் செலுத்தும் வட்டி தொகை அதிகமாகவும் கடனுக்கு செலுத்தும் தொகை குறைவாகவும் பின்னர் படிப்படியாக வட்டி குறைவாகவும் அசல் துகை அதிகமாவதையும் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.

ஒரு வருட வட்டி விகிதம் 12 % என்றாலும் வருட முடிவில் 6.6% வருவதை அறியலாம் . வாய்ப்பாட்ட்டின் மிகச் சுலபமான கணக்கீட்டின் மூலம் இதற்க்கு விடை அறியலாம் இக்கணக்கீட்டை அனைவரும் பள்ளியில் பயின்றிருந்தாலும் காலப்போக்கில் நினைவில் கொள்ள இயலவில்லை

நிலையான வட்டி : கடன் முழுவதும் செலுத்தப்படும் காலம் வரை மாறாது? மாறும்

மாறுபடும் வட்டி : வங்கிகளின் மாறுபடும் Prime Lending Rate க்கு தக்கவாறு வட்டி மாறுபடும் . வட்டி குறைந்தோலோ அல்லது அதிகமானோலோ பிரதி மாதம் செலுத்தும் தவணை தொகை மாறாது ஒரே அளவில் தான் செலுத்த வேண்டும் வட்டி அதிகமானால் தவணை செலுத்தும் காலம் அதிகமாகும் வட்டி குறைந்தால் தவணை செலுத்த வேண்டிய மாதங்கள் குறையும் .

ஞாயிறு, 31 மே, 2009

ஸ்கூபி எனது எஜமானர்


ஸ்கூபி எனது எஜமானர் ஆன கதை
நாங்கள் ஏழு வருஷம் முன்பு புதியதாக வீடு வாங்கி நகர்புறத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குடியேற நினைத்தபோது சுற்றிலும் விடுகள் இன்றி தனிமையில் இருந்தது.தெரிந்தவர்கள் யாரும் அருகில் குடி இல்லாததும் புதிய பகுதியாகவும் இருந்ததால் துணைவியார் மிகவும் பயப்பட்டதால் துணைக்காக ஒரு நாய் வளர்க்க முடிவு செய்தேன்.நண்பர்களிடம் விசாரித்ததில் வளர்ந்த நாயைவிட பிறந்த உடனே வாங்குவது உத்தமம் என்று கூறினார்கள். அதற்கேற்றவாறு சந்தர்ப்பமும் அமைந்தது. எதேட்சையாக நண்பர் விட்டிற்கு சென்ற போது தனது பாமரேனியன் நாய் குட்டி போட்டுள்ளதாகவும் தேவையானால் எடுத்து செல்லுமாறும கூறினார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாகிவிட்டது. பழம் நழுவி பாலில் விழுந்த கதை. யோசிக்கும் போதே காலை எதுவோ நக்குவதாக உணர்ந்து கிழே பார்த்தால் ஒரு குட்டி என் பாதத்திற்கு அருகிலும் மற்றும் ஆறு குட்டிகள் சாற்று தொலைவிலும் மற்றும் தாயின் குறைப்பு சப்தமும் கேட்க ஆரம்பித்தது. நண்பர் என் முகம் பார்த்து விட்டு பேச ஆரம்பித்து விட்டார். பிறந்து ஏழு நாள் தான் ஆகிறது வெளியில் விற்றால் ஐநுரோ ஆயிரமோ கிடைக்கலாம் ஆனால் நீ I ஒன்றும் தரவேண்டாம் ஆணோ பெண்ணோ எது வேண்டுமோ எடுத்துக்கொள். புதியதாக வளர்ப்பதால் பெண் வேண்டாம் ஆணே எடுத்துக்கோ என்றார். எனக்கும் முதல் முதல் என் அருகில் வந்து நண்பனாக்கிகொண்ட குட்டியை வேண்டு மென்று கேட்டேன். பார்தால் ஆண் குட்டி தான். மிக்க சந்தோஷத்துடன் கையில் கொடுத்தார். சிறிது பயத்துடன் அளவற்ற சந்தோஷத்துடன் மகிழ்ச்சியுடன் வளர்ப்பு முறை பற்றி விசாரித்தேன். பால் மட்டும் சிறிது சிறிதாக் கொடுங்கள் வளர்ந்த பிறகு பால் சாதம் கொடுக்கலாம். தீவிர சைவராக நீங்கள் இருப்பதால் மற்றவை எதுவும் தேவையில்லை என்று கூறி எனது மோட்டார் சைக்கிள் சைடு பெட்டியில் அவரே துணியை போட்டு விட்டு குட்டியை விட்டு பெட்டியின் மேல் பாகம் காற்று வர சிறிது திறந்திருக்குமாறு வைத்து செல்லுமாறு கூறினார் நன்றி கூறி வீட்டிற்கு வந்தால் எனது இல்லத்தரசி வாசலிலேயே நிற்க வைத்து என்ன எது என்று விசாரித்து திருப்பி கொடுத்து விடுமாறு அன்புடன் ஆணையிட்டாள். நடந்ததை விவரித்து வளர்ப்பது சுலபம் என்று சொல்லி புதிய வீட்டிற்கு காவலனாக இருப்பான் என்று கூறி சமாதனப்படுத்த முயன்றேன். தான் பார்த்துக்கொள்ள முடியாது என்றும் வழ்க்கத்தில் இல்லாததை எல்லாம் செய்ய வேண்டாம் என்றாள் முடிவில் எல்லா வேலைகளையும் நான் பார்துகொள்வதானால் யோசிக்கலாம் என்று தீரப்பளிதாள். நானும் சரி நாளை யோசிக்கலாம் என்று கூறி குட்டியை வீட்டிற்குள் கிரகாப்பிரவேசம் செய்வித்தேன். மாலையிலிருந்து இரவு முழுவதும தாயை நினைத்து ஒரே அழுகை பாலை ஊட்டி விட்டும் துப்பிவிட்டான் உட்கொள்ளவில்லை நாங்களும் சரியாக உறங்கவில்லை. காலையில் பார்தால் மார்பிள் தரை முழுவதும் மஞ்சள் கலரில் மூச்சா பெய்து கரை ஆகி விட்டது. எங்களுக்கே பயம் பிடித்துக்கொண்டு விட்டது ஆத்துக்காரி சொல்லியது போல பேசாமல் திரும்ப கொண்டு போயி விட்டு விடலாம் என்ற முடிவிற்கு வரவேண்டியதாகிவிட்டது. பார்க்க முடியாது என்று கூரிய ஆத்த்க்காரி தான் தரையை சுத்தம் செய்யவேண்டியதாகிவிட்டது . காலையில் குட்டி சிறிது பால் சாப்பிட்டவுடன் சிறிது அன்யோனயமாகிவிட்டது தனது வீடு போல் பாவித்து தனது தாயை தேடி பார்த்தது. காலையில் அலுவலகம் சென்று விட்டு மாலையில் கொண்டு விடுவதாக ஆத்துக்கரியிடம் சொல்லி விட்டு அலுவலக பணி முடிந்து திரும்ப வர இரவு நேரமாகிவிட்டது சரி காலையில் கொண்டு விடலாம் என்று சாப்பிட்டு படுத்து விட்டோம். அன்றிரவு குட்டியின் செயல்பாடு நேற்று போலன்றி இன்று நட்புடன் அறைக்குள் சுற்ற ஆரம்பித்து தனது சேஷ்டைகளையும் ஆரம்பித்துவிட்டது தூங்க விடவில்லை. காலையில் பார்த்தால் எனது மகன் வெங்கட்ராமன் குட்டிக்கு பால் ஊட்டிக்கொண்டு ஸ்கூபி ஸ்கூபி என்று நாமகரணம் ஷுட்டி கொஞ்சிக் கொண்டிருந்தான் அருகிலேயே மனைவியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் இருவருக்கும் மிக அன்யோன்யமாகி விட்டது தெரிந்தது இருவரிடமும் ஸ்கூபியை கொண்டு விட்டு விடவா என்று கேட்டதற்கு இன்னும் ஒரு நாள் பார்க்கலாம் என்றார்கள் இந்த நேரத்தில் எனக்கு ஒரு வருஷம் முன்பு எங்கள் வீட்டிற்கு யுரேகா வாக்குவம் கிளீனர் விற்க வந்த விற்பனை பிரதிநிதி நினைவு தான் உடனடியாக வந்தது.- வளரும்.