Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

திங்கள், 11 ஏப்ரல், 2011

இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு & விஷு நல்வாழ்த்துக்கள்


இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு & விஷு நல்வாழ்த்துக்கள்
வரவேற்போம்
 2011-தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை சுக்ல பட்சம் ஏகாதசி திதி மக நட்ச்த்திரம் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில்  நண்பகல் 1 மணிக்கு சூர்ய உதயாதி 17.28நாழிகையில் கடக லக்னம் துலா நவாம்சத்தில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலத்தில்   கர வருஷம் மங்களகரமாக பிறக்கிறது 14.04.2011 கர வருஷத்தின் முதல் நாள் அறுபது வருட இந்திய பாரம்பர்ய காலண்டரில் இருபத்தைந்தாம் ஆண்டு. சித்திரை வருஷப்பிறப்பன்று கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் உள்ளது பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருளாசி பெருவர் ஒவ்வொரு வீட்டிலும் புது பஞ்சாங்கம் வாங்கி பூஜையில் வைத்து மாலையில் படிப்பது பழக்கம்.கோயிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்து தானம் அளிப்பதும் நடைமுறையில் உள்ளது .
கேரளத்தில் விஷுக் கனி  காணல் என்று கொண்டாடுகின்றனர் சித்திரை வருஷபிறப்பிர்க்கு முதல் நாள் ஒவ்வொருவரும் பூஜை அறையில் இரவில் ஒரு தட்டில் பொன் வெள்ளி ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் புஷ்பம் தேங்காய் கண்ணாடி கிடைக்கும் பழங்கள் முதலியவற்றை வைத்து வருஷப் பிறப்பன்று காலையில் துயில் எழுந்ததும் கண்களை திறக்காமல் பூஜை அறைக்குள் சென்று  தட்டில் வைத்திருக்கும் பொருட்களை பார்த்த பின்னர் கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்து  பின்னர் ஸ்வாமி படத்தை நமஸ்கரித்து வீட்டிலுள்ள பெரியோர்களை நமஸ்கரித்து ஆசி பெறும்போது பணம் கொடுப்பார்கள்.தமிழ் நாட்டிலும் பெரும்பான்மையாக கொண்டாடுகிறார்கள்  
புத்தாண்டு தினத்தன்று வீட்டு வாசலில் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வீட்டை அலங்கரித்து ஸ்வாமியை நமஸ்கரித்து பூஜைகள் செய்து பலவிதமான தின்பண்டங்களுடன் மாங்காய்  வெல்லம் வேப்பம்பூ சேர்த்து பச்சடி செய்து நாம் உண்கிறோம் இந்த இனிப்பு புளிப்பு கசப்பு கலவையானது நமது வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள  ஒரு ஊக்கசக்தியாகும்.

இவ் வருஷத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்று மேன்மேலும் வளர்ந்து மட்டற்ற மகிழ்ச்சியையும் சேர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்தையும் நீங்காத புகழையும் தினமும்  பெறவும் புதிய வருஷத்தில் புதிய சக்தியுடன் புதிய எண்ணங்களோடு புதிய சாதனைகளை நீங்கள் சாதிக்கவும் நீங்கள் நினைப்பவை கைகூடி வரவும் ஒரு வளமான  வாழ்க்கை இந்த ஆண்டில் துவக்கவும் என்றும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்
LIC சுந்தரமூர்த்தி குடும்பத்தினர்
www.salemscooby.blogspot.com

வேப்பம் பூ பச்சடி செய்முறை (நினைவூட்ட)
தேவையான அளவு வேப்பம்பூ மாங்காய்-வெல்லம் –-உப்பு-மிளகாய் கடுகு  
மாங்காய் பச்சை மிளகாய் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் வேப்பம்பூவை கடாயில்போட்டு கரகரவென வறுத்துக் கொண்டு வெல்லத்தை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்
மாங்காயை நீரில் வேக வைத்து வதக்கிய பச்சை மிளகாயையும்  வெல்லக் கரைசலையும்  மாங்காயுடன் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து சூடாக்கவும் உப்பு சேர்த்து கொதித்தவுடன் இறக்கி வைத்து கரகரவென வறுத்து வைத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கி கடுகு தாளிக்கவும் தேவையெனில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். 
சுவையான வேப்பம்பூ பச்சடி சாப்பிட தயார் சாப்பிடலாமா? 

LIC சுந்தரமூர்த்தி குடும்பத்தினர்

www.salemscooby.blogspot.comகருத்துகள் இல்லை: