Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

பாரதி வித்யாலய முன்னாள் மாணவர் சங்க விழா 2011








பாரதிவித்யாலய மேல்நிலைப்பள்ளி மரவனேரி சேலம் 636007 முன்னாள் மாணவர்கள் நாங்கள் நடத்திய நமது குடும்ப விழாவின் 57 வது ஆண்டு மிகவும் சிறப்பாக எந்த விதமான வெளி நபர்கள் ஆக்ரமிப்பின்றி சர்வசாதாரணமாக நடைபெற்றது. சரஸ்வதி தேவி வீணை மீட்டி நம்மை அழைக்கும் காட்சியை ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டே பள்ளியுள் நுழைகிறோம்.

மாணவர் சங்க வருடாந்திர கூட்டம் வழக்கம் போல் குடியரசு தினத்தன்று கொண்டாடப்பட்டது. அறிவுப்பு ஒரு வாரம் முன்பாகவே தினமலர் பத்திரிகையில் 20.01.2011 அன்று வெளி வந்தது மற்றும் சேலம் நகர கேபிள் மூலம் தொலைக்காட்சி செய்திகளிலும் அறிவித்தார்கள் .
சாதனைகள் பல புரிந்துள்ள நமது பள்ளி. 1946ஆம் ஆண்டில் பிராம்மண சேவா சங்க நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டு பின்னர் 1950ல் பாரதிவித்யாலய உயர்நிலைப்பள்ளியாகி தற்போது பாரதிவித்யாலய மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருவது அனைவருக்கும் தெரிந்ததே
விழாவை ஆரம்பிக்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து நீராடும்.......... யா குந்தேந்து துஷார ஹார தவளா.............கலைமகளை காக்க கூறி .சரஸ்வதி அஷ்டகமும்–உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் என்று சிவபெருமானை துதித்து ......திருதொண்டர்புராணமும்...........வித்யாவந்தம் யசஸ்வந்தம் .....தேவி மஹா த்மியத்திலிருந்து பாடி என்னைக் கல்வியுடையோனாகவும் புகழுடையோனாகவும் செல்வனாகவும் செய்வாயாக எனக்கு நல்ல வடிவையும், வெற்றியையும் புகழையும், தந்து பகைமையை நீக்குவாயாக என்று தினசரி பாடிய அந்த இறைவணக்க பாடலை பள்ளியின் மானாக்கர்கள் பாட ஆரம்பிக்கும்போதே கலந்து கொண்ட நாங்கள் அனைவரும் மீண்டும் பள்ளியில் படிப்பது போன்ற உணர்வில் இருந்தோம்
மீண்டுவர சில நிமிடங்கள் ஆனது அதன் பின்னர் நமது சங்கத்தின் தலைவர் திருM.A.கலைஅரசன்-பாண்டியன் பேப்பர் கம்பனி அறிமுக உரை நிகழ்ச்சி நிரல் நிகழ்ச்சி தொகுப்பு என தனி மனிதராகவே கவனித்துக் கொண்டார் பின்னர் சங்க உறுப்பினர்கள் சிலர் தாங்கள் இந்த பள்ளியில் படித்ததனால் அடைந்த நன்மைகளையும் வீட்டில் கட்டுக்கடங்காமல் இருந்த போது இங்கு சேர்த்து தாங்கள் கல்லூரி முடித்து தற்போது சிறந்த நிர்வாகியாக இருப்பதையும் அதற்கான ஆசிரியர்களின் சிறப்பான கல்விசேவை மற்றும் போதித்த ஒழுக்கமுறை காரணத்தால் தற்போது வாழ்வில் வசந்த காலத்தில் இருப்பதற்கு நன்றி தெரிவித்தனர்.

நமது மாணவர் சங்கம் 1957ல் தற்போதைய கௌரவத்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஆடம்பரமின்றி நடைபெற்றுவருகிறது. இந்த சங்கத்தின் கெளரவத்தலைவர் திரு வ.மு.ராமசாமியை பற்றி பேச வேண்டுமானால் இந்த பதிவுகள் இடம் போதாது ஏனெனில் சங்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து சங்க முதல்வராக இருந்து அனைத்து பொறுப்புகளிலும் பணியாற்றி தற்போதும் இளமையுடன் சங்கப் பணிகள் ஆற்றுவதுடன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்கள் பத்து போரையும் கஷ்டப்பட்டு தேடி அழைத்து வந்திருந்தார் இதில் வியப்பென்னவேன்றால் அனைவருமே எண்பது வயதுக்கு மேர்ப்பட்டவர்களுமன்றி சதாபிஷேகம் கண்டவர்கள்,.அனைவரும் துள்ளிக் குதித்து ஒடி வந்ததுதான் அதிசயம் . அவர்கள் அனைவரையும் பாராட்டி மிக மூத்த முன்னாள் மாணவர்கள் என்று கெளரவித்து கரகோஷத்துக்கிடையில் பொன்னாடை அளித்து நாமும் இது போலதொடர்ந்து சங்க உறுப்பினராகவும் நாமும் என்னாளும் இளைஞனாக இருக்கவும் நமக்குத் தெரிந்த மாணவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கி நின்றது.
சேலம் நகரிலுள்ள ஆடிட்டர் திரு B. சரவணன் பேசும் போது வருங்காலத்தில் தணிக்கைத் துறையும் கணினி சம்பந்தமான படிப்புகள் வளமாக இருக்கப்போவதால் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து அதற்கு தான் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறினார். சில நண்பர்களும் இதே கருத்தை சொல்லி நாம் படித்த காலத்தில் தற்போது இருப்பது போல புத்தகங்கள் மற்றும் மீடியா தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் நம்மால் சிறுது கஷ்டப்பட வேண்டியதிருந்தது ஆனால் தற்போது அந்த நிலை இல்லை இருந்தாலும் நாம் கஷ்டப்பட்டு அனுபவித்து தெரிந்து கொண்டதை தற்போது பயிலும் மாணவர்களுக்கு சுருக்கமாக எந்த மாதிரி எல்லாம் தொழில் துறை உள்ளது அதற்க்கு தேவையான பயிற்சியினை இலவசமாக அவர்களுக்கு கற்றுத் தர தயாராக இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைகள் தற்போது சர்வசாதாரனமாக இருப்பதால் அது பற்றியும் அவர்களுக்கு பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்கள்.
“குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர:
குரு: ஸாஷாத் பரம் ப்ரஹம தஸ்மை ஸ்ரீ குருவே நம:”
என்று குருவை தியானித்து முன்னாள் ஆசிரியர்கள் நால்வருக்கு பொற்கிழி அளித்து கௌரவிக்கப்பட்டது. ஆசிரியர் ஸ்ரீ நடராஜய்யர் தனது துணைவியாருடன் வந்து பெற்றுக்கொண்டது சிறப்பாக அமைந்தது.
ஆடிட்டர் அசோக் துரைசாமியும் சங்க பொருளாளரும் சேலத்தின் சிங்கமென தணிக்கை துறையில் கோலோச்சும் ஆடிட்டர் துரை அவர்களின் குமாரரும் அவார். பொருளாதாரம் நல்ல முறையில் செயல் படுத்துவதை பார்க்க முடிந்தது சங்க ஆயுள் சந்தா ரூபாய் 500/-ஆண்டு சந்தா ரூபாய் 50/- மட்டும் வசூலித்து வேறு எந்த நன்கொடையும் பெறாமல் ஆண்டு விழா செலவுகளை செய்து திருப்தியான அளவில் காபி மதிய உணவு எல்லாம் அளித்ததிலிருந்தே தெரிகிறதே.
இசை நிகழ்ச்சியை வழங்கியவர்கள் மாதவமணி குழுவினர். எல்லோரும் தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் என்பதும் நமது உறுப்பினர்களும் ஆவர். திகட்டாத செவி இன்பத்தையும் அளித்தனர் நமது உறுப்பினர்கள் சிலரும் இனிமையாக பாடி நிகழ்ச்சியை மெருகேற்றினர். ஆடிட்டர் திரு பாலாஜி தனக்கு தணிக்கையை தவிர இசையும் அத்துபடி தான் என்பதனை மெய்ப்பித்தார்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பணியாற்றி தனக்கும் விழாவிற்க்கும் சம்பந்தம் இல்லாதது போல் ஒதுங்கி அமர்ந்திருந்தது ஆச்சர்யமளித்தது உதாரணமாக சாரதாம்பாள் பிரிண்டர்ஸ் சுப்ரமணியனை அருகில் அழைத்தும் வரவில்லை குடத்தில் இட்ட விளக்காக அனைவரும் தங்கள் பணியினை பூர்த்தி செய்து மிளிர்கிறார்கள்.
பள்ளி தாளாளர் நாராயணன் குடும்பம் எவ்வளவு தான் வசதிபடைத்திருந்தாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் இதே பள்ளியில் படிக்க வைத்தார் என்பதும் ஆயுள் சந்தாவயும் செலுத்துகிரார் என்பதும் பள்ளி மேல் அவருக்குள்ள பாசமும் நேசமும் புரிந்தது.
திரு V.வேலுப்பையன் முன்னாள் ஆசிரியாராயிருந்தாலும் இன்னும் பெயருக்கேற்றவாறு மாணவர் போன்றே சுறுசுறுப்புடன் செயளாளர் பதவிக்கேற்ப விழாவை சிறப்புற நடத்தி நன்றி உரையும் ஆற்றினார்.
சூர்யா சுகலையா மருத்துவமனை டாகடர் திருA.K. கண்ணன் துணைத் தலைவர் பொறுப்பை சிறப்பான முறையில் செய்திருந்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா எலக்ட்ரிகல்ஸ் திருV. ரவிச்சந்திரன் துணை செயளாளர் பதவிக்கேற்ப அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.
தலைமை ஆசிரியர் திருG. புஷ்பநாதன் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி-தேர்ச்சி விகிதம் பற்றி கூறும்போது ஒன்பதாம் வகுப்பு வரை எங்கு படித்திருந்தாலும் எந்த வித வடிகட்டலுமின்றி அணைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்வதால் சென்ற ஆண்டில் பத்தாம் வகுப்பில் 82% தேர்ச்சியும் பன்னிரண்டாம் வகுப்பில் அணைத்து மாணவர்களையும் மேம்படுத்தி 91% தேர்ச்சி விகிதம் உள்ளதாக கூறினார் 3320 மாணவர்கள் நம் பள்ளியில் படிப்பதாக கூறியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அறிவை மேம்படுதுவதற்குண்டான அணைத்து வசதிகளும் இன்றைய சூழ்நிலைக்கேர்ப்ப நிர்வாகம் அமைத்துக்கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் தன்னுடைய பெயரினை ஆங்கிலத்தில் எழுதவோ அல்லது ஆங்கில எழுத்துக்கள் A TO Z கூட தெரியாமல் இப்படி வந்து சேரும் மானவர்களையும் நல் மாணவர்களாக திறமை படைத்தவர்களாக ஆக்கிய பெருமைக்கு நல்லாசிரிய பெருமக்கள் திறமைதான் காரணம்.
விளையாட்டுப்போட்டி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகளும் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.
சேலத்தில் கல்வியில் மேன்மையும் ஒழுக்கத்திற்கு முதலிடமும் என்று நினைத்து பழைமை வாய்ந்த பள்ளியில் சேர்ந்து படிப்பதே பெருமை என்று பெற்றோர் நினைத்தது அந்தக் காலம்.......... காலம் மாறிவிடவில்லை இந்தக் காலத்திலும் தொடர்கிறது என்பது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையிலிருந்தே தெரிகிறது.
நாங்கள் படித்த ஓடு வேய்ந்த வகுப்பறை காணாமல் போயிருந்தது அதற்குப்பதிலாக அதி நவீன அடுக்கு மாடி கட்டிடங்கள் அரண்போல்அமைந்திருந்தது விளையாடிய விளையாட்டு மைதானம் முதலியவற்றை சுற்றிப்பார்த்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தோம் மாற்ற மில்லாதது பள்ளியின் முன்தோற்றம் மட்டுமே அது கூட இன்று தான் கட்டி முடித்தார் போல் பளிச்சென்று அழகாக அமைந்துள்ளது. . புதியதாக கட்டப்பட்டு வரும் அரங்கம் மிக பெரிதாகவும் சிறப்பானதாகவும் மாணவர்களின் தேவைக்கு உகந்ததாகவும் உள்ளது நமது அடுத்த சங்க விழாவினை அரங்கத்திலே நடத்தி பார்க்கவும் ஆவல்.
இந்த பள்ளி எத்தனை மாணவர்களை தயார்படுத்தி அறிவு விளக்கு ஏற்றிஉள்ளது என்று எண்ணிப் பார்க்கவே பெருமையாக உள்ளது நமது நண்பர்கள் பலர் உயர் பதவி வகிப்பதும் இங்கே நாம் எடுத்துக்கொண்ட கல்வி அறிவு மற்றும் பயிற்ச்சிப்பட்டறைதான்.
பள்ளி சம்பந்தமான இணைய தளம் ஆரம்பிப்பது பற்றியும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் தயாரித்து அளிப்பது பற்றியும் பல நண்பர்கள் முன் வந்தனர். நானும் முந்திக் கொண்டேன்.
விழாவிற்கு 300 உறுப்பினர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது அடுத்த வருஷம் முதல் குடும்பத்துடன் பங்கேற்க முன் வருவோம் 600 உறுப்பினர்கள் இருப்பினும் வெளிநாடு வெளிமாநிலத்தில் இருப்பதால் பலர் வர இயலவில்லை.உறுப்பினர் எண்ணிக்கை உயர நாமும் முயற்சி செய்வோம்
சங்கத்தலைவர் திருM.A.கலைஅரசன் மற்றும் நிர்வாகக்குழுவினரும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி விழாவை சிறப்பித்தமைக்கு சங்க உறப்பினர்கள் சார்பில் மனதார பாராட்டி அவர்கள் தம் குடும்பத்துடன் கல்வி செல்வம் நீளாயுள் பெற்று வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
விழா முடிந்து வயிறார உணவருந்தி பின்னர் பிரிய நேரும்போது பள்ளிக்கு ஏதேனும் பயனுள்ளவற்றை செய்யலாம் என்று நினைத்தபோது பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி நல்ல நிதி நிலைமையில் இருப்பதால் தற்போது நன்கொடை தேவை இல்லை என்று கூறியது நினைவில் நின்றது
எல்லாப் புகழும் ஆசிரியப் பெருமக்களையே சாரும் நற்கல்வி நல்லொழுக்கம் போதித்த நல்லாசிரியர்களை மறக்கமுடியுமா? பலர் இறைவனடி சேர்ந்து விட்டனர் பலர் ஒய்வு பெற்று விட்டனர்.இன்னும் பணி செய்து கொண்டு இருக்கும் அணைத்து நல் ஆசிரியர்களும் திடகாத்திரத்துடன் செல்வசெழிப்புடன் நல்ல குடும்பமாக வாழ பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த ஆண்டு விழாவில் பங்கு பெற்ற, சந்தர்ப்பவசமாக கலந்து கொள்ளாத முன்னாள் மாணவர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள்- நிர்வாகத்தினர் அனைவர் தம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் தழைத் தோங்கி திடமான ஆரோக்கியம் நீண்ட ஆயுள் அணைத்து செல்வங்களும் பெற்று நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்.
பசுமை நிறைந்த நினைவுகளே பாடிப் பறந்த பறவைகளே என்ற மேற்கோ ளுக்கேர்ப்ப விழா இனிதாக நடந்தது. விழா முடிந்த பின்னர் அனைவரும் பிரியும்போது அடுத்த குடியரசு தினம் எதிர் நோக்கி சென்றோம்
நமது பள்ளியுடன் எனக்குள்ள தொடர்பு விடுபடாமல் இருப்பதற்கு நமது பள்ளியின் தொலை பேசி எண் 2414114 என்னுடைய தொலை பேசி எண் 2414141 அதனால் தவறாய் பதிவு செய்யும் எண்களுக்கு அடிக்கடி பதில் அளிக்கும்போதும் பள்ளி நினைவுகள் தொடர்கிறது.
உங்களில் ஒருவன் LIC சுந்தரமூர்த்தி

கருத்துகள் இல்லை: